கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-05-24 18:45 GMT

காரைக்குடி

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குடி கிராமத்தில் உள்ள மதகடி நாச்சியம்மன் கோவில் வருடாபிஷேக விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஆலங்குடி-மானகிரி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 33 வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை கூத்தலூர் சாத்தையா மற்றும் வல்லாளப்பட்டி மகாவிஷ்ணு வண்டியும், 2-வது பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 3-வது பரிசை பல்லவராயன்பட்டி இளமாறன் வண்டியும் பெற்றது.

பூஞ்சிட்டு பந்தயம்

பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 2-வது பரிசை தேவாரம் கவுசல்யா வண்டியும், 3-வது பரிசை மேலமடை சீமான்ராஜா வண்டியும் பெற்றது.

இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பாகனேரி முருகன் வண்டியும், 2-வது பரிசை பனங்குடி சேவியர்தாஸ் வண்டியும், 3-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்