மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

Update: 2023-05-16 18:45 GMT

சாயல்குடி

கடலாடி அருகே வனப்பேச்சி அம்மன் கோவில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு பூஞ்சிட்டு, நடுமாடு, சின்ன மாடு ஆகிய முப்பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை மறவர் கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த வில்வ லிங்கம் என்பவரது மாடு பெற்றது. இரண்டாவது பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடு பெற்றது. மூன்றாவது பரிசை ஆப்பனூர் அனுஸ்ரீ, மேலக்கிடாரம் ஜெனிதா ஆகியோரது மாடு பெற்றது. இதேபோல் நடுமாடு மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசு சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடு பெற்றது. இரண்டாவது பரிசு முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி என்பவரது மாடு பெற்றது. மூன்றாவது பரிசை பூலங்கால் காதர் பாட்ஷா என்பவரது மாடு பெற்றது. இதேபோல் சின்ன மாடு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்ற போட்டிகளில் முதல் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடு பெற்றது. இரண்டாவது பரிசை மறவர் கரிசல்குளம் கருப்புத்துரை என்பவரது மாடு பெற்றது. போட்டிகளில் நடுமாடு பந்தயத்தில் முதலாவதாக வந்த மாடு ஒரு கிலோ மீட்டர் தூரம் சக்கரம் இல்லாமல் வந்து முதல் பரிசை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்