கல்லல் அருகே மாட்டு வண்டி பந்தயம்
கல்லல் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.;
காரைக்குடி
கல்லல் அருகே பாகனேரி புல்வநாயகி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காடனேரி-மதகுபட்டி சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 31 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி மற்றும் ஜெமினிப்பட்டி ஆனந்தன் வண்டியும், 2-வது பரிசை காடனேரி உடையப்பன் மற்றும் கள்ளந்திரி ஐந்துகோவில் சுவாமி வண்டியும், 3-வது பரிசை நைனாபட்டி மூக்கையா மற்றும் காளாப்பூர் தமிழ்மணி வண்டியும் பெற்றது. சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 2-வது பரிசை பூலான்குளம் தொட்டிச்சியம்மன் வண்டியும், 3-வது பரிசை தேத்தாம்பட்டி மகேஷ் வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை பாண்டாங்குடி முருகேசன் வண்டியும், 2-வது பரிசை பாகனேரி அருள்ஜோசு, வெள்ளநாயக்கன்பட்டி சீமான் வண்டியும், 3-வது பரிசை கோட்டணத்தாம்பட்டி கதிரேசன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.