கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.;

Update: 2022-08-27 17:42 GMT

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே விராமதி கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் விராமதி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 35 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன் வண்டியும், 2-வது பரிசை கானாடுகாத்தான் அருண் வண்டியும், 3-வது பரிசை துலையனூர் பாஸ்கரன் வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ஈனக்குடிப்பட்டி யாழினி மற்றும் பரளி கணேசன் வண்டியும், 2-வது பரிசை நல்லாங்குடி முத்தையா வண்டியும், 3-வது பரிசை நெய்வாசல் பெரியசாமி மற்றும் சாத்திக்கோட்டை கருப்பையா வண்டியும் பெற்றது.

இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 19 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தல்லாம்பட்டி நித்தீஸ்மங்கையர்கரசி வண்டியும், 2-வது பரிசை வலையன்வயல் சின்னம்மா மற்றும் ஓனாங்குடி அப்துல்லா வண்டியும் 3-வது பரிசை கூடலூர் போதுராஜா வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்