மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம்

மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.;

Update:2023-10-09 06:43 IST

மேலூர்

மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம் முசுண்டகிரிப்பட்டி சாலையில் இருந்து ஆமூர் விலக்கு வரை நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 13 வண்டிகள் கலந்துகொண்டன. முதல் பரிசை மேலூர் தெற்குப்பட்டி பிரேம் பிரதர்ஸ் நல்லாங்குடி, 2-ம் பரிசை மேலூர் ஆட்டுக்குளம் அழகர்மலையான் நகுல்நிலா, 3-ம் பரிசை தஞ்சை நீலகண்ட பிள்ளையார் லிங்கேஷ் ஆகியோரது மாடுகள் வெற்றி பெற்றன. சின்னமாட்டு வண்டி என மொத்தம் 38 வண்டிகள் 2 சுற்றாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று போட்டியில் முதல்பரிசை சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டை ராமையா கோனார், 2-ம் பரிசை கொடிமங்கலம் திருப்பதி அம்பலம், 3-ம் பரிசை சிங்கம்புணரி பிரபாகரன், 2-வது சுற்று போட்டியில் முதல் பரிசை ஆட்டுக்குளம் அழகர்மலையான், நகுல்நிலா 2-ம் பரிசை கள்ளந்திரி ஐந்துகோவில் சுவாமி துணை அஸ்வந்த், 3-ம் பரிசை கிடாரிப்பட்டி சின்னையா சுவாமி துணை ஆகியோரது மாடுகள் வெற்றிபெற்றன. வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகையும், வெற்றி கோப்பையும் வழங்கினர். மாட்டுவண்டி பந்தயத்தை ரோட்டின் இருபுறமும் பந்தய ரசிகர்கள் ஆராவாரம் செய்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்