பணகுடியில் மாட்டுவண்டி போட்டி
பணகுடியில் மாட்டுவண்டி போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.;
பணகுடி:
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் பணகுடியில் மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் வில்வண்டி மற்றும் தட்டு வண்டி என 2 பிரிவுகளாக போட்டி நடந்தது. இந்த போட்டியை சபாநாயகர் அப்பாவு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தட்டுவண்டி போட்டியில் முதலிடத்தை ஆனந்த், 2-வது இடத்தை மணிகண்டன் ஆகியோர் பிடித்தனர். வில்வண்டி போட்டியில் முதல் இடத்தை ஜெர்லின் ராஜா, 2-வது இடத்தை சுயம்பு ஆகியோர் பிடித்தனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.