மாட்டு வண்டி எல்கை பந்தயம்
அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.;
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அல்லரைகுண்டகவயல் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட பல்ேவறு பகுதிகளில் இருந்து 41 ஜோடி மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன. பந்தயம் 2 பிரிவுகளாக நடைபெற்றது.
பரிசு
பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாட்டு வண்டிகளும், கரிச்சான் மாடு பிரிவில் 27 ஜோடி மாட்டு வண்டிகளும் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர் களுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் பொதுமக்கள் திரண்டிருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். அறந்தாங்கி மற்றும் ஆவுடையார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.