ஆம்பூர் அருகே எருது விடும் திருவிழா

ஆம்பூர் அருகே எருது விடும் திருவிழா நடந்தது.;

Update: 2022-05-28 18:39 GMT

ஆம்பூர்

ஆம்பூர் அருகே எருது விடும் திருவிழா நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா ஏ பகுதியில் கெங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதனை ஆம்பூர் வில்வநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இந்த காளைகள் வாடிவாசல் வழியாக கொண்டு வரப்பட்டு விடப்பட்டன. இதில் குறித்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கான பரிசுகள் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆம்பூர் தாசில்தார் பழனி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தி.மு.க. நகர செயலாளரும் ஆம்பூர் நகர மன்ற துணைத் தலைவருமான எம்.ஆர்.ஆறுமுகம், மாதனூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஆர். வெங்கடேசன், ஆம்பூர் 5-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் வசந்தராஜ், 12-வது நகரமன்ற உறுப்பினர் லட்சுமிபிரியா அன்பு உள்பட ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்