பூலாவரியில் எருதாட்டம்

பூலாவரியில் எருதாட்டம் நடந்தது.

Update: 2023-05-18 19:59 GMT

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டலாம்பட்டி அருகே பூலாவரியில் உள்ள ஊரடி முனியப்பன், ஏரி முனியப்பன் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று எருதாட்டம் நடந்தப்பட்டது. இதில் பங்கேற்க 35 காளைகள் பூஜை செய்து, அழைத்து வரப்பட்டன. பின்னர் முனியப்பன் சாமிகளுக்கு பூஜை செய்தும், பொங்கல் வைத்தும் எருதாட்டம் தொடங்கியது. இதனை சிறப்பு தாசில்தார் தமிழ் முல்லை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. எருதாட்டத்தை பூலாவரி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்