வேலூரை அடுத்த ஊசூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி காளை விடும் விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி கண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அனிதா சிவகுமார், ஊராட்சி செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி வரவேற்றார். அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமையிலான வருவாய்த் துறையினர் உறுதிமொழி ஏற்று விழாவை தொடங்கி வைத்தனர்.
காளைகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 11 மணி அளவில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 87 மாடுகள் பங்கேற்றது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவை ரசித்தனர். மாடுகள் முட்டியதில் 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.