ஆரணி
ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு காளை விடும் திருவிழா நடந்தது.
விழாவில் வேலூர், தர்மபுரி, படவேடு, காளசமுத்திரம், கீழ்அரசம்பட்டு, காஞ்சீபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்ேகற்றன.
வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை அங்கிருந்த இளைஞர்கள் தட்டி ஆரவாரம் செய்தனர்.
காளை விடும் திருவிழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வேகமாக ஓடி குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.