சாலை அமைத்து தரக்கோரிவீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

தேவதானப்பட்டி அருகே சாலை அமைத்து தரக்கோரி வீடுகளில் கருப்பு கொட்டி கட்டி போராட்டம் நடந்தது.

Update: 2023-08-14 18:45 GMT

தேவதானப்பட்டி பேரூராட்சி 13-வது வார்டு கக்கன்ஜி நகரில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து கழிவுநீர் கால்வாய், குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் மெயின்ரோட்டில் இருந்து கக்கன்ஜி நகருக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் சாலை அமைத்து தரக்கோரி நேற்று பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்