பி.எஸ்.என்.எல். சேவை துண்டிப்பு; வாடிக்கையாளர்கள் கடும் அவதி
பி.எஸ்.என்.எல். சேவை துண்டிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.;
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் பி.எஸ்.என்.எல். சிம் பயன்படுத்தும், அதன் வாடிக்கையாளர் செல்போன் பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர். இதேபோல் பி.எஸ்.என்.எல். இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டதால், அதன் வாடிக்கையாளர் இணையதளத்தை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பி.எஸ்.என்.எல். சிம் மத்திய-மாநில அரசு அலுவலர்கள், ஊழியர்கள் பெரும்பாலனோர் பயன்படுத்தி வருகின்ற சூழ்நிலையில் நேற்று மாலை முதல் இரவிலும் சேவை துண்டிக்கப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் வோடாபோன் சேவையும் இரவு 9 மணி வரை பாதிக்கப்பட்டது. அந்த வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டனர்.