பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினா்

Update: 2023-06-01 20:34 GMT

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4-ஜி, 5-ஜி சேவைகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கடந்த 1-1-2017 முதல் வழங்கப்பட வேண்டிய 3-வது ஊதிய திருத்தத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்டு உள்ள தடைகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

அதன்படி ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஆர்.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலு முன்னிலை வகித்தார். இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கைகோர்த்து நின்றபடி போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்