முத்தையாபுரத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் அண்ணன், தம்பி படுகாயம்

முத்தையாபுரத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் அண்ணன், தம்பி படுகாயம் அடைந்தனர்.;

Update: 2022-06-29 15:15 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சூசைநகர் பகுதியை சேர்ந்தவர் செய்யது முகமது. இவரது மகன் ரசூல்கான் (வயது 23). அவரது அண்ணன் மாலிக் பாட்ஷாவுடன் முத்தையாபுரம் கீதாநகரில் உள்ள மூத்த அண்ணன் ரபீக் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, பின்பு வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர். ஸ்பிக்நகரை அடுத்த முத்தையாபுரம் பஜாரில் சாலையை கடந்து செல்ல முயன்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்