அண்ணன்-தம்பி கைது
கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.;
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 140 கிலோ கஞ்சாவை, நத்தம் பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி, அவருடைய தம்பி அருண்பாண்டி ஆகியோரை கடந்த ஓராண்டாக போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் படுகை காட்டூர் அருகே மலையடிவாரத்தில் இவர்கள் 2 பேரும் பதுங்கி இருப்பதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான தனிப்படையினர் அங்கு விரைந்தனர். பின்னர் அங்கு பதுங்கி இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.