பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது

பெண்ணின் கழுத்தை இறுக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-07 18:53 GMT

நாட்டறம்பள்ளி அருகே உள்ள லட்சுமி சாமுடி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி லலிதா (வயது 55). இவர் தனது மகன் அருண்குமாருடன் வீட்டின் மேல்தளத்தில் வசித்து வருகிறார். இவரது தம்பி மற்றும் தாயார் ருக்மணி ஆகியோர் கீழ் தளத்தில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அருண்குமார் தனது தாயாரின் பெயரில் உள்ள சொத்தை முழுவதும் தனது பெயருக்கு மாற்றிவிட்டார். இதனால் லலிதாவை இனி இங்கு வரக்கூடாது என தம்பி கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று லலிதா வழக்கம் போல் தனது மேல் தளத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற போது, தம்பி ரமேஷ் உனக்கு சொத்து இல்லாதபோது நீ இனிமேல் வரக்கூடாது என கூறினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், லலிதாவை கழுத்தை இறுக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. கழுத்தில் காயமடைந்த லலிதா நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும் லலிதா கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்