திருத்தணி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

திருத்தணி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.;

Update: 2023-10-20 15:19 GMT

திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை ஊராட்சி நூலக சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ கமல விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலில் நடை சாத்தப்பட்டு மீண்டும் நேற்று வழக்கம்போல அதிகாலையில் கோவில் நடை திறக்க வந்த பூஜாரி கோவிலுக்கு வந்தார். அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சாமிக்கு பூஜை செய்ய வந்த பூசாரி கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் திருட்டு சம்பவம் நடைபெற்ற கோவிலில் ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்