வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பள்ளிகொண்டா அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

Update: 2023-04-01 15:50 GMT

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள வெட்டுவாணம் ராஜாஜி பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 43), இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். மாதம் ஒருமுறை ஊருக்கு வந்து செல்லும் இவர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன மேலும் அதில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து சுந்தர்ராஜன் பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்