வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை

ஒரத்தநாடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2023-06-04 18:45 GMT

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

போஸ்ட்மேன்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கீழத்தெருவை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் பிரதீப் (வயது35). இவர் ஈச்சங்கோட்டையில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக போஸ்ட்மேனாக வேலை செய்து வருகிறார்.

கடந்த (2-ந் தேதி காலை) பிரதீப் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் 2 மணிக்கு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

வலைவீச்சு

அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்