வீட்டின் கதவை உடைத்து வெள்ளி நாணயம், பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து வெள்ளி நாணயம், பணம் திருட்டுப்போனது;

Update: 2023-05-20 20:45 GMT


மதுரை கோமதிபுரம், மல்லிகை தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்த வெள்ளி நாணயம் மற்றும் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து ராமலிங்கம் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்