ரூ.15 லட்சத்தில் பாலம் அமைத்து வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை

ஓசூரில் தெப்பக்குளத்தின் நடுவே ரூ.15 லட்சத்தில் பாலம் அமைத்து வைக்கப்பட்டுள்ள விநாயகரை ஏராளமான பொதுமக்கள் வழிபட்டு சென்றனர்.

Update: 2022-09-03 17:28 GMT

ஓசூர்

ஓசூர் தேர்பேட்டை இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி தேர்பேட்டையில் உள்ள தெப்பக்குளத்தில் ரூ.15 லட்சம் செலவில் கே.ஜி.எப். படக்குழுவினரை கொண்டு பாலம் அமைத்து, தீவு போல் செட் அமைத்தும் உள்ளே விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. பாலம் வழியாக விநாயகரை தரிசிக்க செல்லும் வழியில் ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் பின்புறம் மண்டபத்தில், சீதைக்கு விநாயகர் மோதிரம் வழங்குவது போன்ற சிலை வைக்கப்பட்டுள்ளது. குளத்தை சுற்றிலும் தத்ரூபமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாலத்தின் மீது நடந்து சென்று விநாயகரை தரிசிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாலத்தின் மீது ஒரு தடவைக்கு 10 பேர் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர். ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன், நேரில் சென்று அரங்கை பார்வையிட்டு, விநாயகரை வழிபட்டார். அவருக்கு விழாக்குழுவினர் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்த விநாயகரை ஏராளமான பொதுமக்கள் வழிபட்டு சென்றனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்