பள்ளிபாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்
பள்ளிபாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு சாலையில் இருந்து ஆலாம்பாளையம் வரை மேம்பாலம் கட்டும்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆலாம்பாளையத்தில் இருந்து பஸ் நிலையம் வரை 15 தூண்கள் கட்டப்பட்டு உள்ளன. தற்போது பள்ளிபாளையம் பஸ் நிலைய ரோட்டில் தூண்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதற்கு ராட்சச எந்திரம் மூலம் சிமெண்டு கலவைகள் கொட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு ஆண்டில் மேம்பால பணிகள் பணியில் முடிவடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.