கலைஞர் சிலை முன்பு திருமணம் செய்து கொண்ட மணமக்கள்...!
மதுரை அருகே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளில் அவரது சிலை முன்பு மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.;
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றனது.
அந்த வகையில், மதுரை சிம்மக்கல்லில் உள்ள கலைஞரின் சிலை அலங்கரிக்கப்பட்டு பிறந்தாநாள் விழா விமர்சையாக நடைபெற்று வந்தது.
அப்போது கலைஞர் கருணாநிதியின் சிலை முன்பு மாலை மாற்றி மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.