கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சாயக்காரத்தெரு பகுதியில் இணையதள சேவை வைத்து நடத்தி வருபவர் அரபிராஜா (வயது43). இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டாராம். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டுஉடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1300-ஐ காணவில்லை. யாரோ மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிசென்றது தெரிந்தது. இதுகுறித்து அரபிராஜா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.