குடிநீர் குழாயில் உடைப்பு

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பினால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.;

Update: 2023-06-05 19:24 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய்கள் முழுமையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீணாக செல்கிறது. அதிலும் குறிப்பாக துலுக்கன்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் குகன்பாறை, வால்சாபுரம், நடுச்சத்திரம், மேலச்சத்திரம், கீழச்சத்திரம், ஆண்டியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்