குடிநீர் குழாயில் உடைப்பு
குடிநீர் குழாயில் உடைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை;
ராணிப்பேட்டை சிப்காட் அருகே கிளை நூலகம் அமைந்துள்ள சாலையில் குடிநீர் குழாய் பல இடங்களில் உடைந்து, தண்ணீர் வினியோகம் செய்யும்போது வீணாக வெளியேறி சாலையில் குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன் சாலையும் பாழாகிறது. இதை உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.