எமரால்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
எமரால்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.;
மஞ்சூர்
மஞ்சூர் அருகே எமரால்டு அணையில் இருந்து குன்னூர், வெலிங்டன் ராணுவ மையம் ஆகிய இடங்களுக்கு எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் எமரால்டு போலீஸ் நிலையம் அருகில் உள்ள எமரால்டு கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் 20 அடி உயரத்துக்கு மேல் பீய்ச்சி அடித்தது. இதனால் தண்ணீர் வீணானது. தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து உடைப்பை சரி செய்தனர். அதே இடத்தில் நேற்று மீண்டும் உடைப்பு ஏற்பட்டது. அப்போது 10 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. ஒரு மணி நேரம் தண்ணீர் வீணாக சென்றது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் ஆறு போல் ஓடியது. பின்னர் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது.