கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
உளுந்தூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவுக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர். உண்டியலில் சுமார் ரூ.3 ஆயிரம் இருந்து இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.