கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டுபோனது.;

Update: 2023-01-20 18:58 GMT

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூரில் கிழக்கு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையை செலுத்தி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து, பணத்தை திருடி சென்றனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி, உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்