தேங்காய்களை சாலையில் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டம்
திருப்பாச்சேத்தியில் தேங்காய்களை சாலையில் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்புவனம்
திருப்பாச்சேத்தியில் தேங்காய்களை சாலையில் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
தமிழ்நாடு தென்னை விவசாய சங்கம் சார்பில் தேங்காய்களை சாலையில் உடைக்கும் போராட்டம் திருப்பாச்சேத்தியில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மதுரைவீரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் முத்துராமு சிறப்புரை ஆற்றினார். போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரபாண்டி, மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அய்யமபாண்டி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஈஸ்வரன், தென்னை விவசாய சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார், ஒன்றிய தலைவர் கேசவன், ஒன்றிய பொருளாளர் மதியரசு மற்றும் செந்தில், அசோக்சுந்தரம், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேங்காய்களை உடைத்தனர்
போராட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் என்ற பெயரில் விவசாயிகளை அலைய விடக்கூடாது என்றும், அனைத்து தென்னை மரங்களுக்கும் காப்பீடு வழங்கவும், தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை மீண்டும் கோவைக்கு மாற்றவும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் பேசினர்.
பின்னர் திருப்பாச்சேத்தி ஊராட்சி மன்றம் முன்பு உள்ள சாலையில் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். .