கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update: 2022-11-27 08:25 GMT

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட நந்திவரம் காலனி பகுதிக்கு செல்லும் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த ருக்மணி சத்யபாபா சமேத வேணுகோபால பெருமாள் பஜனை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அர்ச்சகர் கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் வைக்கப்பட்டிருந்த சில்வர் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு சில்லறைகள் சிதறி கிடந்தன. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்