பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசிமக திருத்தேர் 8-ம் திருவிழா
பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசிமக திருத்தேர் 8-ம் திருவிழா நடந்தது.;
பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கொடிேயற்றத்துடன் தொடங்கி நடந்தது. இதையொட்டி சப்பரத் தேரோட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து திருத்தேர் எட்டாம் திருவிழா நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடந்தது. அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் தலைமையில் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர். இதனைத்தொடர்ந்து இரவில் சந்திரசேகர சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்பாள் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி திருமேனிகள் சப்பரத்தில் வைக்கப்பட்டு மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது.