திருமணத்திற்குச் சென்ற இடத்தில் லிப்ட்டில் சிக்கித் தவித்த சிறுவன் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு
காஞ்சிபுரம் அருகே லிப்ட்டில் சிக்கித் தவித்த சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் அருகே லிப்ட்டில் சிக்கித் தவித்த சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
ஐயம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் தனது மனைவி, மகன் ஆகியோருடன் அந்த பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அவரது மகன் பிரவீன் குமார் மண்டபத்தில் இருந்த லிப்ட்டில் சென்றுள்ளார். இந்த நிலையில் லிப்ட் திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் லிப்ட்டின் கதவை உடைத்து சிறுவனை பத்திரமாக மீட்டனர்.