ராஜபாளையம் அருகே விபத்தில் சிறுவன் பலி

ராஜபாளையம் அருேக விபத்தில் சிறுவன் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-10-23 20:15 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருேக விபத்தில் சிறுவன் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.

பஸ் மோதியது

ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள அழகைநகரை சேர்ந்தவர் செல்வமுத்துக்குமார் (வயது 23). இவர் தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றும் சக தொழிலாளருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் ஆசிலாபுரத்திற்கு சென்றனர். இவருடன் சூர்யா (16) என்பவரும் உடன் சென்றார்.

பிறந்த குழந்தையை பார்த்து விட்டு இருவரும் வீட்டிற்கு வந்து ெகாண்டு இருந்தனர். கோதை நாச்சியார்புரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பஸ் இவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

சிறுவன் சாவு

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக 2 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார். செல்வ முத்துக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்