குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானார்.

Update: 2023-06-10 18:46 GMT

புதுக்கோட்டை அருகே முள்ளூர் பக்கம் வெள்ளக்கோன்பட்டியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் சாய் கணேஷ் (வயது 6). இவன் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த சேகர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சாய்கணேசை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்