செங்கல் சூளை தீயில் தவறி விழுந்த சிறுவன் பலி

செங்கல் சூளை தீயில் தவறி விழுந்த சிறுவன் பலியானான்.;

Update: 2023-01-23 22:53 GMT

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகே உள்ள புதூர்காடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50), இவர் கொரியர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜானகி மற்றும் 2 மகன்களுடன் புதூர் காடம்பட்டியில் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளனர். சம்பவத்தன்று இரவு செங்கல் சூளையில் வேலை நடந்து கொண்டிருந்த போது பெருமாளின் இளைய மகன் உன்னிகிருஷ்ணன் (16) அங்கு தீயில் விழுந்ததாக ெதரிகிறது. இதில் உடல் கருகிய அவனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உன்னிகிருஷ்ணன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்