மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த வழக்கில் சிறுவன் கைது

காவேரிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டான்.;

Update: 2023-07-03 18:07 GMT

காவேரிப்பாக்கம்,

காவேரிப்பாக்கம் முக்தீஷ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் தனசேகர் (வயது 40). இவர் இரண்டு நாட்களுக்கு முன் கட்டளை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்்றபோது மர்ம நபர்கள் அவரை தாக்கி மோட்டார் சைக்கிளை தீவைத்து கொளுத்தினர்.

இது தொடர்பாக மர்ம நபர்களை காவேரிப்பாக்கம் போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று காவேரிப்பாக்கத்தில் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய காவேரிப்பாக்கத்தை சார்ந்த முருகன் மகன் சந்தோஷ் (26), சீனிவாசன் மகன் ஸ்ரீதர் (25) ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்