பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது
பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர் தாலுகா சித்தரேவு கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுவன், பிளஸ்-1 மாணவியிடம் திருமண ஆசைகாட்டி உல்லாசமாக இருந்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். கருவை கலைக்க சிறுவன், அவரது தந்தை, உறவினர்கள் 3 பேர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கருவை கலைக்க முடியவில்லை. மேலும் இதுதொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியை, அவர்கள் 5 பேரும் மிரட்டியதாக தெரிகிறது.இதுகுறித்து சிறுமி தரப்பில், நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் 5 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்தார். இதில் சிறுவனை மட்டும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.