தர்மபுரி:
கவுண்டப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரமூர்த்தி (வயது 31). சம்பவத்தன்று தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்ட இவருடைய மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது. இதேபோல் காரிமங்கலத்தை சேர்ந்த தொழிலாளி சத்தியவான் (45) என்பவரின் மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டது. இது தொடர்பான புகார்களின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தர்மபுரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.