புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது

திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது

Update: 2023-08-07 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள விளந்தை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் மகேந்திரன்(வயது 27). இவர் அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்குகள் விற்பனை செய்வதாக மணலூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மதன் மோகன் தலைமையிலான போலீசார் பெட்டி கடையில் சோதனை செய்தனர். அப்போது சுமார் 1½ கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்குகள் விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து மகேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1½ கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்