திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் ஆலங்குப்பம் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதேஊரை சேர்ந்த சுந்தா்ராஜ் (வயது 89) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.