பெண்ணாடம்
பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் பெண்ணாடம், முருகன்குடி, அகரம், பொன்னேரி, மாளிகைகோட்டம், இறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண்ணாடம் சிலப்பனூர் சாலை ஆற்றங்கரை பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணாடம் சோழ நகர் பகுதியை சேர்ந்த குமார் மகன் சுரேஷ்(வயது 42) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.