மதுபாட்டில்கள் விற்றவர் கைது

புதுப்பேட்டை அருகே மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-08-05 18:45 GMT

புதுப்பேட்டை

புதுப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை அருகே உள்ள சின்ன சேமக்கோட்டை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சின்ன சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பட்டுசாமி (வயது 67) என்பதும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பட்டுசாமியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்