வீட்டில், பாட்டில் குண்டு வீச்சு

வீட்டில், பாட்டில் குண்டு வீசப்பட்டது.;

Update: 2022-12-04 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் அருகே உள்ள பசியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (வயது 43). இவருடைய குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த கருப்புச்சாமி குடும்பத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. நேற்று காலை சுமதி வீட்டில் இருக்கும் போது அவருடைய வீட்டுக்குள், கருப்புச்சாமி பாட்டிலில் மண்எண்ணெயை நிரப்பி தீ வைத்து வீசியதாக கூறப்படுகிறது. இதில் வீட்டின் தரையில் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி தண்ீரை ஊற்றி தீயை அணைத்தார். இதுகுறித்து அவர், திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் சூப்பிரண்டு சுந்தரராஜ், மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்