அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி - ரூ .8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
புத்தக கண்காட்சி நடத்த ரூ .8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ .8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா ₹30 லட்சம் ரூபாயும், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கடலூர், கரூர் மாவட்டங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் ரூபாயும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு தலா ரூ . 20 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.