கோவையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை..!

கோவையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-10-30 07:48 GMT

கோவை,

கோவை கோட்டைஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி அதிகாலை 4.10 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் (வயது28) என்பவர் பலியானார். இது தொடர்பாக இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ. டி.ஐ.ஜி. வந்தனா தலைமையில் அதிகாரி கள் கோவையில் முகாமிட்டு ஆரம்ப கட்ட விசாரணை மேற் கொண்டனர். மேலும் கார் வெடிப்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் தடயங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார்.

இந்த நிலையில், தமிழக போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு கார் வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், கோவை கார் வெடிப்பு நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ள நிலையில், கோயிலை சுற்றி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் கோயிலை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்