தாரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கிய தொழிலாளி உடல் மீட்பு
தாரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கிய தொழிலாளி உடல் மீட்கப்பட்டது.;
தாரமங்கலம்,
தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி கிராமத்தில் உள்ள குழந்தான்பட்டி ஏரிக்கு கடந்த 31-ந்தேதி இடங்கணசாலை அருகே கஞ்சமலையூர் பகுதியை சேர்ந்தவரும் பரோட்டா கடையில் வேலைபார்த்த தொழிலாளியுமான சுப்பிரமணி (வயது 44) அதே பகுதியை சேர்ந்த நண்பர் குமார் (42) என்பவருடன் மீன்பிடிக்க வந்துள்ளார். ஏரியின் கிழக்கு கரையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது சுப்பிரமணி அங்கிருந்தவர்களிடம் மறுகரைக்கு நீந்தி சென்று மீன் பிடிக்க போவதாக கூறிவிட்டு நீச்சல் அடித்து சென்றார். அப்போது ஏரியின் நடுவில் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதையடுத்து கடந்த 2 நாட்களாக அவரது உடலை ஏரியில் தேடி வந்த நிலையில் நேற்று 3-வது நாளாக அவரது உடலை தீயணைப்பு படைவீரர்கள் ஏரியில் இறங்கி தேட தொடங்கினர். ஆனால் காலை 9 மணியளவில் ஏரியின் கரையில் அவரது உடல் ஒதுங்கியது. இதையடுத்து அவரது உடலை தாரமங்கலம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.