குளத்தில் மிதந்த வாலிபர் உடல் மீட்பு
குளத்தில் மிதந்த வாலிபர் உடல் மீட்கப்பட்டது.;
அறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் உள்ள பிள்ளையார் கோவில் குளத்தில் வாலிபர் ஒருவரின் உடல் மிதந்து கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் அவர் ஆயிங்குடி தெற்குகையை சேர்ந்த பூபதி மகன் சந்தோஷ் (வயது 20) என்பது தெரியவந்தது. இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், குளிக்க சென்ற போது குளத்தில் நிலைதடுமாறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.