செங்கல்பட்டு அருகே கல்குவாரி குட்டையில் பெண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை

செங்கல்பட்டு அருகே கல்குவாரி குட்டையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update:2022-07-21 14:07 IST

செங்கல்பட்டு மாவட்டம் செட்டி புண்ணியம், வடகால், காந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இங்குள்ள கல்குவாரி குட்டைகளில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து துணி துவைக்கவும், குளிப்பதற்கும் ஏராளமானோர் வருவது வழக்கம்.

இந்த நிலையில் செங்கல்பட்டு அடுத்த வடகால் கல்குவாரி குட்டையில் 36-வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா போலீசார் குட்டையில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்